வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு: என்ன காரணம்?

வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு: என்ன காரணம்?

விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு இன்று காலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம், சித்தூர் ஆகிய ஊர்களில் உள்ள சர்க்கரை ஆலைகள் விவசாயிகளிடம் அவர்கள் சாகுபடி செய்திருந்த கரும்பை  கடந்த 6 வருடங்களாக தொடர்ந்து  பெற்றுக்கொண்டு விவசாயிகளுக்கு பணத்தை தராமல் நிலுவையில் வைத்துள்ளன. இதுதொடர்பாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு  தலைமையிலான  விவசாயிகள் இன்று கடலூர் மாவட்ட ஆட்சியரிடம்  கோரிக்கை மனு அளிக்க இருந்தனர். 

ஆனால் இதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,  திருச்சி -  கரூர் பைபாஸ் சாலையில் உள்ள மலர் சாலையில் இருக்கும் அவரது வீட்டுக்கு இன்று அதிகாலையில் வந்த திருச்சி  மாநகர போலீஸார், வீட்டை விட்டு வெளியில் வந்த அய்யாக்கண்ணுவிடம் அவர் கடலூர் செல்லக்கூடாது என்று கூறியதோடு அவரை விட்டு விட்டு வெளியேறவும் கூடாது என்று சொல்லி  வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யாக்கண்ணு போராட்டம் நடத்தி வரும் நிலையில் பல பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் அவரது இல்லத்திற்கு சென்று கொண்டிருக்கின்றனர். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in