மைல் கல்லுக்கு ஆயுத பூஜை படையல்: சாலைப் பணியாளர்களின் கைவண்ணமா?

மைல் கல்லுக்கு ஆயுத பூஜை படையல்: சாலைப் பணியாளர்களின் கைவண்ணமா?

சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள மைல் கல்லுக்கு ஆயுத பூஜை படையலிட்ட சம்பவங்கள் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வாகனங்கள், தொழில் செய்வதற்கு உதவி செய்யும் கருவிகள், இயந்திரங்கள், பாடப் புத்தகங்கள் எனச் சரஸ்வதி முன்பாக அவற்றை வைத்துப் படையலிடுவது வழக்கம். நிறுவனங்களில் ஆயுத பூஜையை வேலை நாட்களிலேயே தொழிலாளர்களோடு கொண்டாடுவார்கள். அந்த வகையில் நேற்றே பெரும்பாலான நிறுவனங்களில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நேற்று சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருக்கும் மைல் கல்லுக்கு ஆயுத பூஜையை முன்னிட்டு படையலிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், ஒப்பிடமங்கலம் அருகே சாலையோர மைல் கல்லுக்குப் படையல் இட்டு பூஜை செய்து சாலைப் பணியாளர்கள் ஆயுத பூஜையைக் கொண்டாடியுள்ளனர்.  அதுபோல் கோயமுத்தூர் பகுதியில் முக்காலி , சிறுவாணி செல்லும் சாலையில் உள்ள மைல் கல்லுக்குப் பொட்டு வைத்து, மாலை அணிவித்து, வாழைமரம் கட்டி அலங்காரம் செய்யப்பட்டு, படையலிடப்பட்டுள்ளது. அந்த வழியாகச் செல்லும் மக்கள் இதை ஆர்வத்துடன் பார்த்துவிட்டுச் செல்கிறார்கள். குறும்புக்காக யாராவது இப்படிச் செய்தார்களா அல்லது சாலைப் பணியாளர்கள் இப்படிச் செய்தார்களா எனத் தெரியவில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in