மாதம் 15 ஆயிரம் தருகிறோம்; 1.44 கோடி சுருட்டிய போலீஸ்காரர்கள்: ஆசைவார்த்தையால் ஏமாந்த மக்கள்

மாதம் 15 ஆயிரம் தருகிறோம்; 1.44 கோடி சுருட்டிய போலீஸ்காரர்கள்: ஆசைவார்த்தையால் ஏமாந்த மக்கள்

மலேசியா எண்ணெய் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 15,000 தருவதாக கூறி பொதுமக்களிடம் 1.44 கோடி வசூலித்து மோசடி செய்த ஆவடி ஆயுதப்படை காவலரை போலீஸார் கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் 3 காவலர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் உள்ள ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருபவர்கள் தர்மன், ரமேஷ், ஜானகிராமன் அரிகிருஷ்ணன். இவர்கள் பொதுமக்களிடம் மலேசியாவில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் 15 ரூபாய் தருவதாக ஆசை வார்த்தை காட்டியுள்ளனர். இதை நம்பி பலர் இவர்களிடம் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிலையில் இவர்கள் கொடுத்த வாக்குறுதியின்படி மாதம் 15,000 கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சென்னை ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் நேற்று புகார் அளித்துள்ளனர். இந்த புகாரியின் பேரில் காவலர் தர்மனை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் மூன்று காவலர்களை போலீஸார் தேடி வருகின்றனர். பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே மோசடியில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in