ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 9-ம் வகுப்பு மாணவி பரிதாப மரணம்

9-ம் வகுப்பு மாணவி  மரணம்
9-ம் வகுப்பு மாணவி மரணம் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 9-ம் வகுப்பு மாணவி பரிதாப மரணம்

தூத்துக்குடியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ஹாரிஷா பாஷினி சிகிச்சைக்குச் செல்லும் வழியிலேயே உயிர் இழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி விவிடி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சுப்புலெட்சுமி(37) இந்தத் தம்பதியினருக்கு மஞ்சு(16), ஹாரிஷா பாஷினி(13) என இருமகள்கள் இருந்தனர். இதில் ஹாரிஷா அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்துவந்தார். விஜயகுமார் தன் குடும்பத்துடன் உறவினர் வீட்டிக்குச் செல்ல ஆட்டோவில் கோரம்பள்ளம் என்னும் பகுதிக்கு குடும்பத்துடன் சென்று இருந்தார். மீண்டும் வீட்டிற்கு ஆட்டோவில் திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது பின்னால் வந்த லோடு ஆட்டோ ஒன்று இவர்கள் சென்ற ஆட்டோ மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் நிலை குலைந்த ஆட்டோ, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்தது. அருகில் இருந்தவர்கள் ஆட்டோவில் இருந்த விஜயகுமார் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் பலத்த காயம் அடைந்திருந்த ஹாரிஷா பாஷினியை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

சாலை விபத்தில் பள்ளி மாணவி உயிர் இழந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in