சவாரிக்கு அழைத்துச்சென்று ஆட்டோ ஓட்டுநர் கொலை: சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்த சோகம்

 கொலை
கொலை சவாரிக்கு அழைத்துச்சென்று ஆட்டோ ஓட்டுநர் கொலை: சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்த சோகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சவாரிக்கு அழைத்துப்போய் ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். உடலை வாங்க மறுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்துராஜ்(54). ஆட்டோ ஓட்டுநராக இருந்த இவர் சவாரிக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பின்பு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கிறிஸ்துராஜின் மனைவி காவல்நிலையத்தில் புகாரும் கொடுத்திருந்தார். இந்தநிலையில், ஆசாரிபள்ளம் பகுதியில் ஒரு தோட்டத்தில் கிறிஸ்துராஜ் கடுமையாகத் தாக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் மயங்கிக் கிடந்தார். அங்கு சுயநினைவு திரும்பாமலேயே சிகிச்சை பெற்றுவந்த கிறிஸ்துராஸ் நேற்று மாலை உயிர் இழந்தார்.

இந்தநிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை முன்பு கிறிஸ்துராஜின் உறவினர்கள் திரண்டனர். அவர்கள் சவாரி என அழைத்துச் சென்று கிறிஸ்துராஜ் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து கொல்லப்பட்டுள்ளார் எனவும் குற்றம்சாட்டினர். இதனிடையே மருத்துவமனைக்கு நாகர்கோவில் எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தியும் வந்து கிறிஸ்துராஜ் குடும்பத்திற்கு ஆதரவாக, போலீஸாரிடம் பேசினார்.

கிறிஸ்துராஜிக்கு கடைசிவரை சுயநினைவு திரும்பாததால் யார் அடித்தார் என்பதும் தெரியவில்லை. இன்று கிறிஸ்துராஜின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படும் எனவும் போலீஸார் தெரிவித்தனர். கொலையாளிகளைக் கண்டுபிடிக்க ஆட்டோ பயணித்த இடங்களின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கிறிஸ்துராஜ் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in