என் ஆட்டோவில் வந்து ஏறு; அலறிய இலங்கை மாணவி: பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநர் கைது

என் ஆட்டோவில் வந்து ஏறு; அலறிய இலங்கை மாணவி: பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநர் கைது

இலங்கையை சேர்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சென்னை மாதவரத்தில் உள்ள தனியார் பள்ளியில் இலங்கை நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி 12-ம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் சிறுமி பள்ளி முடிந்து மூலக்கடை பகுதியிலிருந்து பேருந்து மூலமாக வீட்டிற்கு செல்வது வழக்கம், கடந்த 28-ம் தேதி பேருந்து கூட்டமாக சென்றதால் சிறுமி ஆட்டோ மூலமாக வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் ஆட்டோ ஓட்டுநர் தான் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருவதாகவும், தன்னிடம் 2 லட்ச ரூபாய் பணம் இருப்பதாகவும், தன்னுடன் வந்தால் ஜாலியாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமி, உடனே சுதாரித்து கொண்டு தாய் அருகில் இருப்பதாகவும் பின்னர் பார்க்கலாம் என கூறி விட்டு ஆட்டோ ஓட்டுநரிடம் இருந்து தப்பிச்சென்றுள்ளார். இதனை தொடரந்து நேற்று மீண்டும் ஆட்டோ ஓட்டுநர், சிறுமி படிக்கும் பள்ளி அருகே வந்து ஆட்டோவில் ஏறும்படி வற்புறுத்தி உள்ளார். இதனால் சிறுமி கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் அந்த ஆட்டோ ஓட்டுநரை பிடித்து தர்ம அடிகொடுத்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் ஆட்டோ ஓட்டுநர் புழல் கங்காதரன் பகுதியை சேர்ந்த செல்வக்குமார்(38) என்பதும், இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் செல்வக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in