இலங்கை கையில் ஆஸ்திரேலியாவின் பிடி; இங்கிலாந்துக்கு அதிர்ஷ்டம் கிடைக்குமா?

இலங்கை கையில் ஆஸ்திரேலியாவின் பிடி; இங்கிலாந்துக்கு அதிர்ஷ்டம் கிடைக்குமா?

7 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறுமா? என்பது இன்று நடக்கும் இலங்கை- இங்கிலாந்து முடிவை பொறுத்து தெரிந்துவிடும்.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலக கோப்பை போட்டியில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. குரூப்-1 பிரிவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் 2 பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் 1 பிரிவில் 5 போட்டிகளில் விளையாடி உள்ள நியூசிலாந்து அணி 3 வெற்றி ஒரு தோல்வியுடன் 7 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலிய 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி ஒரு தோல்வியுடன் 7 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 3-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து 5 புள்ளிகளுடன், 4-வது இடத்தில் இருக்கும் இலங்கை 4 புள்ளிகளுடன், அடுத்து 3 புள்ளிகளுடன் அயர்லாந்தும், 2 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தானும் இருக்கின்றன.

குரூப் 2 பிரிவில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 3 வெற்றி ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி ஒரு தோல்வியுடன் 5 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 2-வது இடத்திலும், 4 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 3-வது இடத்திலும், 4 புள்ளியுடன் வங்கதேசம் 4-வது இடத்திலும், 3 புள்ளிகளுடன் ஜிம்பாப்வே 5-வது இடத்திலும், 2 புள்ளிகளுடன் நெதர்லாந்து 6-வது இடத்திலும் இருக்கின்றன.

குரூப்-1 பிரிவில் நியூசிலாந்து ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா அணியும் அரையிறுதிக்கு தகுதி பெறுமா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இன்று இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் அதிக ரன் வித்தியாசத்தில் இரு அணிகளும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வாய்ப்பு சற்று கடினம் என்று சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில் குரூப் 2 பிரிவில் முதலிடத்தில் இருக்கும் அரையிருக்கு இந்தியா முன்னேறி விட்டது. தென் ஆப்பிரிக்காவும் தனது அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்து கொண்டுள்ளது. இருந்தாலும் பாகிஸ்தான் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் அரையிறுதி வாய்ப்பு அந்த அணிக்கும் பிரகாசமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in