தலிபான்களுக்கு எதிர்ப்பு - ஆப்கனுடனான கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியது ஆஸ்திரேலியா!

தலிபான்களுக்கு எதிர்ப்பு - ஆப்கனுடனான கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியது ஆஸ்திரேலியா!

பெண்களுக்கு எதிரான தலிபான் அரசின் அடக்குமுறை நடவடிக்கைகள் காரணமாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா அணி விலகிய

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மார்ச் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடக்கவிருந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறுவதாக ஆஸ்திரேலியா அணி அறிவித்துள்ளது. பெண்களின் உரிமைகளை கட்டுப்படுத்தும் தலிபான் அரசுக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு இந்த முடிவினை எடுத்துள்ளது.

இந்திய சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து மார்ச் மாதம் ஐசிசி சூப்பர் லீக்கின் மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா எதிர்கொள்ள இருந்தது.

ஆஸ்திரேலிய அரசு உள்ளிட்ட நிர்வாக அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து, கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளது.

இது தொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெண்களின் கல்வி, வேலை வாய்ப்புகள் மற்றும் பொது இடங்களுக்கு செல்வது ஆகியவற்றில் கட்டுப்பாடுகள் விதிக்கும் தலிபான்களின் சமீபத்திய அறிவிப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

ஆப்கானிஸ்தான் உட்பட உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் ஆண்களுக்கான விளையாட்டை வளர்ப்பதற்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு உறுதிபூண்டுள்ளது. நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான மேம்பட்ட நிலைமைகளை எதிர்பார்த்து நாங்கள் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்போம்" என்று தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் இந்த தொடரில் ஆஸ்திரேலியா 30 போட்டி புள்ளிகளை இழக்கும். இந்தப் புள்ளிகள் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்படும். ஆனால் அக்டோபரில் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே தகுதியைப் பெற்றுள்ளது

2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தலிபான் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியது. அவர்கள் உடனடியாக விளையாட்டில் பெண்கள் பங்கேற்பதற்கு கட்டுப்பாடுகளை விதித்தனர். மேலும், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளுக்குச் செல்லவும் தடை விதித்தனர். கடந்த மாதம் பெண்கள் பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதையும் அவர்கள் தடை செய்துள்ளனர். இது உலகளாவிய சீற்றத்தைத் தூண்டியது.

சமீபத்தில், ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கும் தலிபான் அரசு தடை விதித்துள்ளது

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in