இந்தியாவை 117 ரன்களில் சுருட்டிய ஆஸ்திரேலியா: சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள்!

இந்தியா - ஆஸ்திரேலியா
இந்தியா - ஆஸ்திரேலியாஇந்தியாவை 117 ரன்களில் சுருட்டிய ஆஸ்திரேலியா: சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெறும் 117 ரன்களின் சுருண்டுள்ளது.பேட்ஸ்மேன்கள் யாருமே நிலைத்து ஆடாததால் இவ்வளவு குறைவான ஸ்கோரை இந்தியா எடுத்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் முதல் ஓவரின் 3வது பந்திலேயே சுப்மன் கில் ஸ்டார்க் பந்தில் டக் அவுட்டானார். அதன்பிறகு 4வது வது ஓவரை ஸ்டார்க் வீசினார், இதில் 4வது பந்தில் ரோகித் சர்மா 13 ரன்களுடன் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதற்கு அடுத்த பந்திலேயே சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டானார். அதன்பின்னர் விராட் கோலி ஓரளவு நிலைத்து ஆடியதால் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனாலும் கே.எல்.ராகுல் 9 ரன்களிலும், ஹர்திக் பாண்ட்யா 1 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டானார்கள். இதனைத் தொடர்ந்து கோலியும் 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 16 ரன்களிலும், குல்தீப் யாதவ் 4 ரன்களிலும், ஷமி மற்றும் சிராஜ் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அக்சர் படேல் ஆட்டமிழக்காமல் 29 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதனால் இந்திய அணி 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆஸ்திரேலிய அணியின் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும் , அபோட் 3 விக்கெட்டுகளையும், எல்லிஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in