இந்தியாவை ஊதித் தள்ளியது ஆஸ்திரேலியா: 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது!

ஆஸ்திரேலியா அபார வெற்றி
ஆஸ்திரேலியா அபார வெற்றி

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 118 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா, இந்திய பவுலர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்து வென்றது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் முதல் ஓவரின் 3வது பந்திலேயே சுப்மன் கில் ஸ்டார்க் பந்தில் டக் அவுட்டானார். அதன்பிறகு ரோகித் சர்மா 13 ரன்களுடன், சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து கே.எல்.ராகுல் 9 ரன்களிலும், ஹர்திக் பாண்ட்யா 1 ரன்னிலும், கோலி 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்பின்னர் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 16 ரன்களிலும், குல்தீப் யாதவ் 4 ரன்களிலும், ஷமி மற்றும் சிராஜ் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அக்சர் படேல் ஆட்டமிழக்காமல் 29 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதனால் இந்திய அணி 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆஸ்திரேலிய அணியின் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும் , அபோட் 3 விக்கெட்டுகளையும், எல்லிஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அடுத்து 118 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள் ட்ராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஸ் அபாரமாக ஆடி இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இதனால் 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி ஆஸ்திரேலியா 121 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. ஹெட் 30 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 51 ரன்களையும், மார்ஸ் 36 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்சருடன் 66 ரன்களையும் எடுத்திருந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in