காவல் ஆய்வாளர் லஞ்சம் கேட்ட ஆடியோ வைரல்: அதிரடியாக சஸ்பெண்ட் செய்த டி.ஐ.ஜி

காவல் ஆய்வாளர் லஞ்சம் கேட்ட ஆடியோ வைரல்: அதிரடியாக சஸ்பெண்ட் செய்த டி.ஐ.ஜி

ஆம்னி பேருந்து உரிமையாளரிடம் 50 ஆயிரம் ரூபாய் காவல் ஆய்வாளர் லஞ்சம் கேட்ட ஆடியோ வைரல் ஆன நிலையில் அவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

புதுவையில் இருந்து கடந்த 22-ம் தேதி மதுரைக்கு ஒரு தனியார் சொகுசு பேருந்து வந்துகொண்டிருந்தது. மதுரை, ஒத்தக்கடை பகுதியில் இந்த சொகுசு பேருந்து வந்து கொண்டிருந்த போது, வேகத்தடையில் அதிவேகமாக வந்தது. இதில் பேருந்தில் இருந்த மல்லிகா என்ற பெண் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதில் மல்லிகாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மல்லிகா, அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதனைத் தொடர்ந்து அந்த பேருந்து ஜப்தி செய்யப்பட்டு ஒத்தக்கடை காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஒத்தக்கடை காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன், தனியார் பேருந்து உரிமையாளரிடம் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தந்தால் ஆம்னி பஸ்ஸை விடுவிப்பதாகச் சொல்லியிருக்கிறார். இந்த ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து ஆய்வாளர் முருகேசனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் லஞ்சம் கேட்டது உறுதியானது. இதைத் தொடர்ந்து இன்று மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி முருகேசனை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இது காவல்துறையினர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in