மக்களே உஷார்: தமிழகத்தில் இன்று முதல் கரோனா கட்டுப்பாடு அமல்

மக்களே உஷார்: தமிழகத்தில் இன்று முதல் கரோனா கட்டுப்பாடு அமல்

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழக விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பணிகளுக்கு இன்று முதல் கரோனா பரிசோதனை நடைபெறுகிறது.

சீனாவில் தற்போது பிஎப் 7 என்ற உருமாறிய கரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கரோனாவில் இருந்து மக்களைக் காக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதன்படி விமான நிலையங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கரோனா பரிசோதனை இன்று முதல் அமல்படுத்தப்படும். அதன் பிறகு விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் 2 தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். இல்லையெனில் சமீபத்தில் எடுக்கப்பட்ட கரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அத்துடன் முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை, தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள மருத்துவக்குழுவை நியமிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பயணிகளுக்கு கரோனா பாஸிட்டிவ் என்று வந்தால் அவர்கள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அத்துடன் கரோனா பாதிக்கப்பட்ட பயணியின் முகவரிக்குட்பட்ட மாவட்டத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அனைத்து பயணிகளுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in