10, 12-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்துக்கு..

ஆன்லைன் மற்றும் தக்கலில் விண்ணப்பிக்க கடைசி நாள்
10, 12-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்துக்கு..
மாதிரிக்கான படம்

10 மற்றும் பிளஸ் 2 தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜன.3 கடைசி நாளாகும்.

எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற இருக்கின்றன. முழுநேரமாக பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, அந்தந்த பள்ளி வாயிலாகவே பொதுத்தேர்வுக்கான விண்ணப்பித்தல் நடைபெறும். இவர்களுக்கு அப்பால் பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் தங்களுக்கான நடைமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும்.

இதன்படி, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வெழுதும் தனித்தேர்வர்கள், ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் நடைமுறை டிச.26 அன்று தொடங்கியது. அரசு தேர்வு இயக்ககத்தின் சேவை மையங்கள் வாயிலாக இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்ப நடைமுறைகள் நாளை(ஜன.3) மாலை 5 மணியுடன் நிறைவடைகின்றன.

இந்த கடைசி நாள் வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு, சிறப்பு ஏற்பாடாக தக்கல் முறை உதவக் காத்திருக்கிறது. இதன் மூலம் 10-ம் வகுப்பு தேர்வுக்கு ரூ.500 மற்றும் பிளஸ் 2 தேர்வுக்கு ரூ.1000 என கூடுதல் கட்டணம் செலுத்தி தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான நடைமுறைகள் ஜன.5 அன்று தொடங்கி ஜன.7 அன்று நிறைவடைகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in