இளம்பெண்ணின் ஆடைகளைக் களைந்து நிர்வாண பூஜை நடத்த முயற்சி: மாமியார், கணவர் கைது

இளம்பெண்ணின் ஆடைகளைக் களைந்து  நிர்வாண பூஜை  நடத்த முயற்சி: மாமியார், கணவர் கைது

கேரளாவில் இளம்பெண்ணின் ஆடைகளைக் களைந்து நிர்வாண பூஜை நடத்த முயன்ற புகாரின் பேரில் அவரது மாமியார், கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் மந்திரவாதி உள்பட பலரைத் தேடி வருகின்றனர்.

கேரளா மாநிலம், கொல்லத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருவனந்தபுரம் அட்டிங்கல் அருகே உள்ள பத்தனம்திட்டாவைச் சேர்ந்த சத்யபாபு (36) என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இதன் பின் திருமணம் முடிந்த 2 மாதங்களில் இளம்பெண் உடலில் தீயசக்தி இருப்பதாககக் கூறி அவரது கணவர் ஒரு மந்திரவாதியை வீட்டிற்கு அழைத்து வந்து பூஜை செய்துள்ளார்.

இந்த பூஜையின் ஒரு பகுதியாக மந்திரவாதி முன்பு இளம்பெண் உடைகளைக் களைந்து நிர்வாணமாக நிற்குமாறு கணவர் சத்யபாபு மற்றும் மாமியார் லைஷா (60) ஆகியோர் கட்டாயப்படுத்தியுள்னர். ஆனால், அதற்கு இளம்பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், அவரை கணவர் குடும்பத்தினர் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இந்த நிலையில், அவர்களிடமிருந்து தப்பிய இளம்பெண் வீட்டை விட்டு வெளியேறி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், ஐந்து ஆண்டுகள் கழித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் அவரது மாமியர் லைஷா, சத்யபாபுவை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில்," இளம்பெண் உடலில் தீயசக்தி புகுந்து விட்டதாக நம்பி அந்த பெண்ணை அவரது கணவரும், குடும்பத்தினரும் கடுமையாக சித்ரவதை செய்துள்ளனர். பேயோட்டுகிறோம் என்று இளம்பெண்ணை உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தியுள்ளனர். அப்துல் ஜப்பார் என்ற மந்திரவாதியிடம் அழைத்துச்சென்ற போது இளம்பெண்ணின் உடைகளைக் கழற்றி நிர்வாண பூஜை நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அப்படி நடத்த பெண்ணின் கணவர், மாமியார் முயற்சி செய்துள்ளனர். அதற்கு அந்த இளம்பெண்ணைக் கட்டாயப்படுத்தி சித்ரவதை செய்துள்ளனர். ஆனால், அதற்கு அந்த பெண் மறுத்ததால், அவரது கணவர் இளம்பெண்ணைத் தாக்கியுடன் அவருக்கு போதை மருந்தும் கொடுத்துள்ளார்.

லைஷா
லைஷா

இதன் தொடர்ச்சியாக அந்த பெண்ணின் உடலில் தீய சக்தி இருப்பதாக நம்பி அவரது கணவரின் கும்பத்தினர் நாகூர், ஏர்வாடி, கொடுங்களூர் உள்ளிட்ட பல இடங்களுக்கு இளம்பெண்ணை அழைத்துச் சென்று மாந்தீரிகம் செய்துள்ளனர். அவர் விஷயத்தைச் சொல்லி விடுவார் என்று போதை மருந்து கொடுத்து வீட்டின் அறையில் அடைத்துள்ளனர். இதுகுறித்து அப்பெண் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து லைஷா, சத்யாபாபு ஆகியோரை நேற்று கைது செய்துள்ளோம். மேலும் தலைமறைவாக உள்ள சத்யபாபுவின் சகோதரி ஸ்ருதி, மந்திரவாதி அப்துல் ஜப்பர் ஆகியோரை தேடி வருகிறோம்" என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in