திருச்சி அருகே ரயிலை கவிழ்க்க முயற்சி? 3 பேரிடம் போலீஸ் விசாரணை!

ரயில் பாதையில் வைக்கப்பட்ட லாரி டயர்கள்
ரயில் பாதையில் வைக்கப்பட்ட லாரி டயர்கள்

திருச்சி சமயபுரம் அருகே தண்டவாளத்தில் லாரி டயர்களை வைத்து கன்னியாகுமரியில் இருந்து சென்னை சென்ற ரயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த 3 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஒன்றாம் தேதி இரவு கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு, கன்னியாகுமரி விரைவு ரயில் சென்றது. இந்த ரயில் திருச்சி சமயபுரம் அருகே உள்ள மேல வாளாடி என்ற கிராம பகுதியை கடந்தபோது, ரயில் பாதையில் லாரி டயர்கள் வைக்கப்பட்டிருப்பதை கண்ட ரயில் எஞ்சின் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.

இந்நிலையில் தண்டவாளத்தில் லாரி டயர்களை வைத்து ரயிலை கவிழ்க்க முயன்றவர்களை கண்டுபிடிக்க ரயில்வே போலீஸ் சார்பில் 2 தனிப்படை, ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் ஒரு தனிப்படை, காவல்துறை சார்பில் 2 தனிப்படை என 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் மேல வாளாடி பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத்குமாரும் சென்றுள்ளார். இந்த விசாரணை முழுமை பெற்றால் ரயில் பாதையில் லாரி டயர்களை வைத்தவர்கள் குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் முழுமையான விவரங்கள் வெளியாகும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in