கடற்கரை மணலில் புதைக்கப்பட்ட 15 மூட்டை காலணிகள்: இலங்கைக்குக் கடத்த முயற்சி

கடற்கரை மணலில் புதைக்கப்பட்ட 15 மூட்டை காலணிகள்: இலங்கைக்குக் கடத்த முயற்சி

இலங்கைக்கு தனுஷ்கோடி கடல் வழியாக கடத்த முயன்ற காலணிகளை கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் வழியாக சமையல் மஞ்சள், கடல் அட்டை, கஞ்சா, யூரியா உரம், வலி நிவாரணி மாத்திரைகள், உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ராமேஸ்வரம்அருகே சேரான்கோட்டை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக ராமேஸ்வரம் கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு நேற்றிரவு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, கஸ்டம்ஸ் அதிகாரிகள் சேரான்கோட்டை கடற்கரைக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள கடற்கரை மணலில் புதைத்து வைத்திருந்த பாலித்தீன் சாக்கு மூட்டைகளை கைப்பற்றினர்.

அதில் 15 மூட்டைகளில் 250 ஜோடி வண்ண காலணிகள் இருந்தன. இதனை தனுஷ்கோடி கடல் வழியாக நாட்டுப்படகு மூலம் இலங்கைக்குக் கடத்த திட்டமிட்டு இருந்தது தெரிந்தது. இக்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட கும்பல் குறித்து கஸ்டம்ஸ் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in