காவல் நிலையத்தில் பெட்ரோல் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி: ஜோலார்பேட்டையில் பரபரப்பு

காவல் நிலையத்தில் பெட்ரோல் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி: ஜோலார்பேட்டையில் பரபரப்பு

நிலப்பிரச்சினை தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஜோலார்பேட்டை காவல் நிலையம் முன்பு பெட்ரோலை ஊற்றி பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த காவேரிப்பட்டு ஊமையன் வட்டத்தைச் சேர்ந்தவர் மதிமாறன். இவரது மனைவி அம்பிகா. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளன.

மேலும் இவர்களுக்குச் சொந்தமாக 1ஏக்கர் 10 சென்ட் நிலம் உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த சிலர் அம்பிகா குடும்பத்தின் 4 சென்ட் நிலத்தையும், ஓய்வு பெற்ற ரயில்வே போலீஸ்காரர் ஒருவர் 13 சென்ட் இடத்தையும் அபகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் அம்பிகா பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அம்பிகாவிற்குச் சொந்தமான நிலத்தை அடியாட்களை வைத்து இன்று சிலர் டிராக்டர் மூலம் உழுதுள்ளனர். அதைத் தட்டிக்கேட்ட அம்பிகா மற்றும் குடும்பத்தினரை ஆபாசமாக பேசி அவர்கள் தாக்க முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அம்பிகா, ஜோலார்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அதை தடுத்து நிறுததினர். இதன் பின் அம்பிகாவிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் ஜோலார்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in