நகைக்கடை அதிபரான பாஜக எம்எல்சிக்கு ஸ்கெட்ச்: ஆட்டோவை மறித்து கொள்ளையடிக்க முயற்சி!

வசந்த் கண்டேல்வால்
வசந்த் கண்டேல்வால் நகைக்கடை அதிபரான பாஜக எம்எல்சிக்கு ஸ்கெட்ச்: ஆட்டோவை மறித்து கொள்ளையடிக்க முயற்சி!

மகாராஷ்டிராவில் நகைக்கடை அதிபரான பாஜக எம்எல்சி காரை வழிமறித்து பணத்தைக் கொள்ளையடிக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம், அகோலா மாவட்டத்தில் வாஷிம்-புல்தானா தொகுதியின் பாஜக எம்எல்சியாக இருப்பவர் வசந்த் கண்டேல்வால். இவர் நகைக்கடை வைத்துள்ளார். இவர் கடையில் வியாபாரம் முடிந்து பணத்துடன் நேற்று இரவு காரில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், இரவு 10 மணியளவில் அவரது காரை ஆட்டோவில் வந்த சிலர் வழிமறித்துள்ளனர். அத்துடன் வசந்த் கண்டேல்வால் வந்த காரை மறித்து ஆட்டோவை நிறுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் காரில் இருந்த பணத்தையும் கொள்ளையடிக்க முயன்றனர். இதனால், வசந்த் கண்டேல்வால் பயத்தில் சத்தம் போட்டார். அத்துடன் போனில் உதவி கோருவதற்காக டயல் செய்துள்ளார்.

அப்போது அந்தக்கும்பல் போனை பறித்துள்ளது. இந்த நிலையில், அப்பகுதி மக்கள் திரண்டு வரவும், கொள்ளையடிக்க வந்த கும்பல் போனை போட்டு விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையர்களிடமிருந்து தப்பியது.

இந்த நிலையில் , பாஜக எம்எல்சியிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றதாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் இன்று தெரிவித்துள்ளனர். அவருடன் வந்தவர்கள் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பாஜக எம்எல்சியிடம் கொள்ளை முயற்சி நடந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in