பெண்ணை எரித்துக் கொல்ல முயற்சி: தீ வைத்தவரும் படுகாயம்

பெண்ணை  எரித்துக் கொல்ல முயற்சி:  தீ வைத்தவரும் படுகாயம்

கள்ளத் தொடர்பிலிருந்த பெண்ணை தீ வைத்து எரித்த போது, தவறுதலாக அவருடன் தொடர்பிலிருந்தவர் மீதும் தீப்பற்றிக் கொண்டது. இந்நிலையில் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

வேலூர் குடியாத்தத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(40). இவர் முள்ளிபாளையம் ராமமூர்த்தி தெருவில் வாடகை வீட்டில் தங்கி உள்ளார். இன்று காலையில் அவரது வீட்டிலிருந்து கரும்புகை வெளியே வந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதற்குள் தீயில் எரிந்தபடியே வீட்டுக்குள்ளிருந்து சாலையை நோக்கி ரமேஷ் ஓடினார். இதனிடையே சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, தீயில் எரிந்த நிலையில் ஒரு பெண் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

அவரை மீட்ட தீயணைப்பு துறையினர் வேலூர், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ரமேஷின் வீட்டில் படுகாயத்துடன் மீட்கப்பட்ட பெண் அதே பகுதியைச் சேர்ந்த திலகவதி (38) என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்துக் காவல் துறை கூறுகையில், ரமேஷீக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கோபி என்பவரது மனைவி திலகவதிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திலகவதி அடிக்கடி ரமேஷ் வீட்டுக்கு வந்து சென்று வந்துள்ளார். இன்று காலை திலகவதி, ரமேஷ் வீட்டுக்குச் சென்ற போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் அருகில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து அவர் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். அப்போது ரமேஷ் மீதும் தீ பற்றிக்கொண்டது. இவர்கள் இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ” என்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in