தேர்தல் முன் விரோதத்தில் ஊராட்சிமன்ற தலைவருக்கு அரிவாள் வெட்டு: ஒப்பந்ததாரர் கைது

தேர்தல் முன் விரோதத்தில் ஊராட்சிமன்ற தலைவருக்கு அரிவாள் வெட்டு: ஒப்பந்ததாரர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார். தேர்தல் முன்விரோதத்தின் காரணமாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகில் உள்ளது அக்காநாயக்கன்பட்டி. இங்கு ஊராட்சி மன்றத் தலைவராக அய்யாத்துரை(60) என்பவர் உள்ளார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருக்கும் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்துவந்தது.

மேலும் ரஞ்சித் சென்னையில் ஒப்பந்தப் பணிகளை எடுத்து வேலை செய்துவந்தார். இந்நிலையில் ரஞ்சித் நேற்று ஊருக்குத் திரும்பினார். மாலையில் அய்யாத்துரையும், அவரது மகன் கலாநிதி(40) பேசிக்கொண்டிருந்த போது ரஞ்சித் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டார்.

அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஊராட்சித் தலைவர் அய்யாத்துரை, அவரது மகன் கலாநிதி ஆகியோரை சரமாரியாக வெட்டினார். இதில் இருவரும் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதத்தில் பஞ்சாயத்து தலைவரை கொலை செய்ய முயன்ற ஒப்பந்ததாரர் ரஞ்சித்தை புளியம்பட்டி போலீஸார் கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in