இரவில் அடிக்கடி செல்போனில் பேசியதைக் கண்டித்த கணவன்: கொலைவெறியில் மனைவி செய்த அதிர்ச்சி காரியம்

இரவில் அடிக்கடி செல்போனில் பேசியதைக்  கண்டித்த கணவன்: கொலைவெறியில் மனைவி செய்த அதிர்ச்சி காரியம்

இரவில் அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசுவதைக் கண்டித்த கணவனின் அந்தரங்க உறுப்பைக் கத்தியால் மனைவி வெட்டிய சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம், பாரிசார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிக்கு 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், விவசாயி மனைவி அடிக்கடி இரவு நேரத்தில் யாருடனோ நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்துள்ளார். இதை விவசாயி கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல யாருடனோ செல்போனில் மனைவி நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்துள்ளார். இதனை அவரது கணவர் கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் பின் கணவர் உறங்கி விட்டார். அவர் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த போது, அவரது அந்தரங்க உறுப்பை கத்தியால் மனைவி வெட்டியுள்ளார். வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அவரை, குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து பார்மர் உதவி காவல் கண்காணிப்பாளர் நர்பத்சிங் ஜெய்தாவத் கூறுகையில்," மருத்துவமனையில் இருப்பவரின் மருத்துவ அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அத்துடன் இரு குடும்பத்தினரிடமும் விசாரணை நடந்து வருகிறது. ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவன் மீது ஏற்கெனவே வரதட்சணை கொடுமை செய்வதாக காவல் நிலையத்தில்அவரது மனைவி புகார் செய்துள்ளதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. டோரிமன்னா காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து எதற்காக இந்த சம்பவம் நடைபெற்றது என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in