ஆறு வயது சிறுமியை பைக்கில் கடத்த முயற்சி: தடுக்க முயன்ற தாய் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு

ஆறு வயது சிறுமியை பைக்கில் கடத்த முயற்சி: தடுக்க முயன்ற தாய் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு

ஆறு வயது சிறுமியை பைக்கில் மர்மநபர்கள் இருவர் கடத்த முயன்றனர். இதைத்தடுக்க முயன்ற சிறுமியின் தாய் மீது மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டத்தில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில் உள்ள அலகாபா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபுல்லா சாஹு. இவரது மனைவி ஜோத்ஷ்ன்ராணி(40). இவர் தனது 6 வயது மகளுடன் ககன்பாபு சதுக்கத்தில் உள்ள மருந்துக்கடையில் நேற்று இரவு மருந்து வாங்கிக் கொண்டு வீடு நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவரது மகளின் கையில் இருந்த செல்போனை பைக்கில் வந்த மர்மநபர்கள் இருவர் பறிக்க முயன்றனர். ஆனால், செல்போனை பறிக்க முடியாததால் சிறுமியை பைக்கில் நடத்த முயன்றனர். அதைத்தடுக்கச் சென்ற சிறுமியின் தாய் ராணி மீது மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது வலது கையில் தோட்டா பாய்ந்தது. இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரளவும், மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

துப்பாக்கிச்சூட்டால் காயமடைந்த ராணியை, அப்பகுதி மக்கள் மீட்டு பாசுதேப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி அளிக்கப்பட்ட பின், ராணி மேல் சிகிச்சைக்காக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in