ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற வி.ஏ.ஓ, உதவியாளருக்கு சகோதரர்களால் நடந்த துயரம்!

ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற வி.ஏ.ஓ, உதவியாளருக்கு சகோதரர்களால் நடந்த துயரம்!

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றவந்த கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளை அண்ணன், தம்பி சேர்ந்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ளது கம்பனேரி கிராமம். இங்கு கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் ராமச்சந்திரன். இவரும் இவரோடு கிராம நிர்வாக உதவியாளராக இருக்கும் ரமேஷும் கம்பனேரி கிராமத்தில் இருக்கும் பன்னீர்பேரிகுளம் கால்வாயில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக அளவீடு பணிக்கு இன்று சென்றனர்.

அப்போது மேலகடையநல்லூர் கிருஷ்ணன்கோயில் கீழத்தெருவைச் சேர்ந்த மோசஸ் என்பவரின் மகன்கள் பிரான்சிஸ்(35), ஆல்பர்ட்(45) ஆகியோர் வேத நாராயணப்பேரி, அலவந்தன் குளம் ஆகியவற்றுக்குச் செல்லும் நீர் ஓடையை ஆக்கிரமித்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர்களிடம் கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரனும், ரமேஷும் கேள்வி எழுப்பினர். இதனைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல் சகோதரர்களான ஆல்பர்டும், பிரான்சிஸும் சேர்ந்து வி.ஏ.ஓ ராமச்சந்திரன், உதவியாளர் ரமேஷ் இருவரையும் சரமாரியாகத் தாக்கினர். இதுகுறித்து கடையநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in