ஊருக்குள் நுழையாதே.. அடித்து துரத்தப்பட்ட எம்எல்ஏ! : பொதுமக்கள் ஆவேசம்

ஊருக்குள் நுழையாதே.. அடித்து துரத்தப்பட்ட எம்எல்ஏ! : பொதுமக்கள் ஆவேசம்

கொலை செய்யப்பட்ட கட்சி நிர்வாகி வீட்டிற்கு ஆறுதல் கூறச் சென்ற ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினரை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து பொதுமக்கள் அடித்து விட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் கோபாலபுரம் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றவர் தலரி வெங்கட்ராவ். இவர் எல்லூரில் படுகொலை செய்யப்பட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறச்சென்றார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் தலரி வெங்கட்ராவை தடுத்து நிறுத்தினர். ஊருக்குள் வரக்கூடாது என்று அவரைத் தாக்க ஆரம்பித்தனர். அதனால் அடி தாங்காமல் அவர் ஓடவும், மக்கள் ஓட ஓட விரட்டி அடித்தனர்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகி கொலை சம்பவத்தில் தலரி வெங்கட்ராவிற்கும் தொடர்பு இருப்பதாக கூறி அவரை பொதுமக்கள் அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவரை பத்திரமாக மீட்டுச் சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.