பைக்கில் பயணித்த 3 பேர்; கண்டித்த ராணுவ வீரர் மீது சரமாரி தாக்குதல்: சிக்கிய மாணவர்கள்

கைது
கைது

நெல்லை மாவட்டத்தில் ராணுவ வீரர் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது செய்யப்பட்டனர். இதில் இருவர் சிறுவர்கள் ஆவார்கள்.

நெல்லை மாவட்டம், திருக்குறுக்குடி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன்(30) மத்தியப் பிரதேச மாநிலத்தில் ராணுவத்தில் வேலை செய்து வருகிறார். மாரியப்பன் விடுமுறைக்காக சொந்த ஊரான திருநெல்வேலிக்கு வந்திருந்தார். இவர் நேற்று மாலை திருநெல்வேலி பேட்டைக்கு தன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கிருஷ்ணபேரி சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டூவீலர் ஒன்று இவர் மேல் உரசியது. அதில் ஒரே பைக்கில் மூவர் இருந்தனர்.

அந்த மூவரையும் ராணுவ வீரரான மாரியப்பன் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மூவரும் மாரியப்பனை சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து பேட்டை காவல்நிலையத்தில் மாரியப்பன் புகார் செய்தார். போலீஸார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சோதனை செய்ததில் அதேபகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்ற வாலிபரும், அவரோடு சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட இரு பாலிடெக்னிக் மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in