காது கிழிந்து ரத்தம் கொட்டியது... பள்ளி மாணவன் மீது கொடூரத் தாக்குதல்: சக மாணவர்கள் வெறிச்செயல்

காது கிழிந்து ரத்தம் கொட்டியது... பள்ளி மாணவன் மீது கொடூரத் தாக்குதல்: சக மாணவர்கள் வெறிச்செயல்

திருநெல்வேலி மாவட்டத்தில் வெவ்வேறு பள்ளி மாணவர்களுக்கு இடையே நடந்தத் தகராறில் மாணவன் இரும்புக் கம்பியால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், ஆயன்குளத்தைச் சேர்ந்தவர் ஆண்டனி. இவரது மகன் சஞ்சய்(16). பாளையங்கோட்டை பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்2 படித்து வரும் சஞ்சய் ஆயன்குளம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி தன் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வேறு பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த இருமாணவர்கள் சஞ்சயை வழிமறித்து இரும்புகம்பியால் கொடூரமாகத் தாக்கினர். இதில் சஞ்சயின் காது கிழிந்து ரத்தம் கொட்டியது. மார்புப் பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் முன்னீர்பள்ளம் போலீஸார் சஞ்சையை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஏற்கெனவே கடந்த இருமாதங்களுக்கு முன்பு இரண்டு பள்ளி மாணவர்கள் பாளை பேருந்து நிலையத்தில் தங்களுக்குள் கொடூரமாக மோதிக்கொண்டனர். இதில் இரு தரப்பினரின் பெற்றோரையும் காவல்நிலையம் அழைத்து சமாதானம் பேசி அனுப்பிவைத்தனர். அதன் தொடர்ச்சியாக இந்தச் சம்பவம் நடந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இதில் தாக்குதல் நடத்தியவர்களும் 18 வயதுக்கு கீழான மாணவர்கள் என்பதால் போலீஸார் தாக்குதல் நடத்தியவர்கள் பெயர் விவரங்களை வெளியிடவில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in