போதையில் தகராறு; கண்டித்த போலீஸ்காரர் மீது தாக்குதல்: குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் 4 பேர் கைது

குற்றாலம் அருவி
குற்றாலம் அருவி கோப்புப் படம்

குற்றாலத்தில் தங்களுக்குள் தகராறு செய்த சுற்றுலாப் பயணிகளை தட்டிக்கேட்ட போலீஸ்காரரை, மதுபோதையில் தள்ளிவிட்டுத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவில் குளிப்பதற்காக சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த சரவணன்(44) என்பவர் தன் நண்பர்களுடன் வந்திருந்தார். இவர்கள் மது அருந்திவிட்டுத் தகராறில் ஈடுபட்டனர். இதை அருவிக்கரையில் பாதுகாப்புக்கு நின்ற போலீஸாரிடம் சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, காவலர் செய்யது மசூது என்பவர் சரவணன் மற்றும் அவரது நண்பர்களிடம் தட்டிக்கேட்டார்.

அப்போது மதுபோதையில் இருந்த சரவணன், அவரது நண்பர்கள் திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம்(50), ராமசந்திரன், மதுரையைச் சேர்ந்த முருகேசன்(50) ஆகிய 4 பேரும் சேர்ந்து காவலர் செய்யது மசூதை கீழே தள்ளினர். தொடர்ந்து தாக்கவும் செய்தனர். இதைப் பார்த்த கடைக்காரர்கள் சிலர் ஓடிவந்து அந்த நான்கு பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். காவலர் செய்யது மசூது கொடுத்த புகாரின்பேரில் 4 பேரையும் குற்றாலம் போலீஸார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in