கோவையில் வடமாநில தொழிலாளிகள் மீது தாக்குதல்: இந்து முன்னணி அமைப்பினர், மாணவர்கள் கைது

இந்து முன்னணி அமைப்பினர், மாணவர்கள் கைது
இந்து முன்னணி அமைப்பினர், மாணவர்கள் கைதுகோவையில் வடமாநில தொழிலாளிகள் மீது தாக்குதல்: இந்து முன்னணி அமைப்பினர், மாணவர்கள் கைது

கோவையில் வடமாநில தொழிலாளிகள் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணி அமைப்பினர், மாணவர் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் கௌதம் சியாமல் கட்டுவா. இவர் கோவை இடையர் வீதியில் தனது நண்பர்கள் தன்மாய் ஜனா, ஜெகத் ஆகியோருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சூரிய பிரகாஷ், பிரகாஷ், கல்லூரி மாணவர்கள் பிரகதீஷ், வேல்முருகன் ஆகியோர் வந்துள்ளனர். அப்போது, கௌதம் சியாமல் கட்டுவா மற்றும் அவருடன் வந்த தன்மாய் ஜனா ஆகியோருக்கு வழிவிடாமல் நடந்து சென்றதாக்கூறி சூரிய பிரகாஷ் மற்றும் அவருடன் வந்த நபர்கள் தாக்கியுள்ளனர். மேலும், பானிபூரி கடையில் இருந்த மோனோ, ஷேக சவான் என்ற மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்களையும் சூரியபிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் மேற்குவங்க மாநில தொழிலாளர்கள் அங்கு திரண்டனர்.

இந்து முன்னணி அமைப்பினர், மாணவர்கள் கைது
இந்து முன்னணி அமைப்பினர், மாணவர்கள் கைது

இதையடுத்து, இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கௌதம் சியாமல் கட்டுவா வெரைட்டிஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இந்து முன்னணியை சேர்ந்த சூரிய பிரகாஷ், பிரகாஷ், பிரகதீஷ், வேல்முருகன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை இந்து முன்னணியினர் தாக்கிய சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in