
வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வாலிபர் மீது தாக்குதல் நடத்திய இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை, வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் நெடுஞ்செழியன் மகன் கண்ணபிரான் (35). அதே பகுதியைச் சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவரின் மகனின் முஹம்மது இஷாத், அப்பாஸ் என்பவரின் மகன் முகமது ரியாஸ் ஆகியோர் கண்ணபிரான் வீட்டின் அருகில் நின்றுள்ளனர். அப்போது, அங்கு வந்த கண்ணபிரான், ஏன் இங்கே நிற்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முஹம்மது இஷாத், முகமது ரியாஸ் ஆகியோர் கண்ணபிரானை ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர். இது குறித்து கண்ணபிரான் அவனியாபுரம் காவல்துறையில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முகமது இஷாத், முகமது ரியாஸ் ஆகியோரை கைது செய்தனர்.