அரசுப்பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்: மினி பேருந்து பணியாளர் கைது

அரசுப்பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்: மினி பேருந்து பணியாளர் கைது

மினி பேருந்தில் ஆள் ஏற்றுவதில் உள்ள தொழில் போட்டியால் அரசுப் பேருந்து நடத்துனரைத் தாக்கிய மினி பேருந்து பணியாளரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் இருந்து தூத்துக்குடி பேருந்து நிலையத்திற்கு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. நேற்று மாலை அது தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திற்குள் வந்தது. அப்போது மினி பேருந்துகள் நிறுத்தும் இடம் அருகே அரசு பேருந்து வந்துகொண்டிருந்தபோது மினி பேருந்தில் ஆள்களை ஏற்றிவிடும் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த ரீகன்(33) என்பவர் அரசுப் பேருந்தை தடுத்து நிறுத்தினார். அரசு பேருந்தை அங்கே நிறுத்தினால் தூத்துக்குடியில் இறங்கி சுற்றுவட்டார கிராமங்களுக்குச் செல்லும் கிராமங்களுக்குச் செல்லும் மக்களை மினி பேருந்தில் ஏற்றிவிடலாம் என்னும் நோக்கத்தில் கதிர்வேல் பேருந்தை நிறுத்தினார்.

ஆனால் அந்த இடம் அரசுப்பேருந்துகள் நிற்கும் இடம் இல்லை என்பதால் பேருந்து நிற்காமல் சென்றது. இதனால் ரீகன் ஆத்திரம் அடைந்து கத்தினார். வேறு மினி பேருந்துகளில் ஏறும்முன்பு தான் வேலைசெய்யும் மினி பஸ்ஸில் ஏற்றும் நோக்கத்தோடு, பேருந்தை நிறுத்தாத அரசுப் பேருந்து கண்டக்டர் கதிர்வேல்(36) என்பவரையும் சரமாரியாகத் தாக்கினார். இதை பேருந்து நிலையத்தில் பஸ்ஸிற்காக காத்திருந்த பொதுமக்கள் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து பரப்பினர். அது இப்போது சமூகவலைதளங்களில் பரவிவருகிறது. இதனிடையே தூத்துக்குடி போலீஸார் அரசு பேருந்து நடத்துனரைத் தாக்கிய ரீகனைக் கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in