பாஜக தலைவர் கடையைச் சூறையாடிய திமுகவினர்: 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை

பாஜக தலைவர் கடையைச் சூறையாடிய திமுகவினர்: 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை

திருநெல்வேலியில் பாஜக நிர்வாகியின் கடையைச் சேதப்படுத்திய திமுகவினர் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், உத்தமபாண்டியன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்கண்ணன்(39). பாஜகவில் தமிழ் வளர்ச்சிப்பிரிவில் மாவட்டத் தலைவராக உள்ளார். இவர் பாளையங்கோட்டை அரியகுளம் பகுதியில் தேநீர் கடை உள்பட நான்கு கடைகள் நடத்திவருகிறார். இவரது கடையில் அதேபகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம், பாரத், செல்வம் ஆகியோர் வேலை செய்து வருகின்றனர்.

வேல்கண்ணன் சில தினங்களுக்கு முன்பு அரியகுளம் பகுதியில் தன் கடை பணியாளர்களைக் கொண்டு பாஜக போஸ்டர்கள் ஒட்டியுள்ளார். அதற்கு மேல் அப்பகுதியைச் சேர்ந்த திமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, காவல்நிலையத்தில் சமரசம் பேசி முடிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு வேல்கண்ணனின் கடைக்குள் புகுந்த ஒரு கும்பல் கடையை சூறையாடியதோடு, கடையில் இருந்த ஊழியர்கள் சிவசுப்பிரமணியம், பாரத், செல்வம் ஆகியோரையும் தாக்கிவிட்டு தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் பாஜக மாவட்டத் தலைவர் தயாசங்கர் உள்ளிட்டோர் அங்கு திரண்டனர். அத்துடன் இன்று காலையில் நெல்லை மாவட்ட எஸ்.பி சரவணனிடமும் மனுகொடுத்தனர்.

இதனிடையே இவ்விவகாரத்தில் திமுக பிரமுகரின் மகன் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in