'அட்லீக்கும் எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது': சிலிர்க்கும் ‘ஜவான்’ ஷாருக்கான்

'அட்லீக்கும் எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது': சிலிர்க்கும் ‘ஜவான்’ ஷாருக்கான்

நடிகர் ஷாருக்கான், அட்லீ இயக்கும் 'ஜவான்' படத்தில் நடித்து வருகிறார். இதுபற்றி பேசிய அவர், தனக்கும் இயக்குநர் அட்லீக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதாக கூறியுள்ளார்.

நடிகர் ஷாருக்கான் நேற்றுடன் திரையுலகில் 30 ஆண்டுகளை நிறைவு செய்தார். அவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு தொலைக்காட்சி தொடர்களில் தனது பயணத்தை தொடங்கினார்.

திரையுலகில் 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஷாருக்கான் அட்லீ இயக்கும் ’ஜவானில்’ பணியாற்றும் அனுபவம் குறித்தும் பேசினார். அப்போது, “ இதுவரை செய்யாத கமர்ஷியல் படத்தை செய்ய விரும்புவதால் அட்லீயுடன் இணைந்துள்ளேன். அட்லீக்கும் எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது. நான் சிலவற்றைக் கொண்டு வருகிறேன், அவர் சிலவற்றைக் கொண்டுவருகிறார். ’ஜவானில்’ நாங்கள் செய்த அனைத்தும் சிலிர்ப்பாகவும், உற்சாகமாகவும் இருக்கும்” என தெரிவித்தார். மேலும் இப்படத்தில் நடிகை நயன்தாரா நடிப்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

முன்னதாக நேற்று, ஷாருக்கான் தனது அடுத்த படமான ‘பதான்’ னின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவற்றை வெளியிட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in