அதிராம்பட்டினத்தில் வெளுத்து வாங்கிய மழை: 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

மழை
மழைஅதிராம்பட்டினத்தில் வெளுத்து வாங்கிய மழை: 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

கோடை வெப்பத்தை தணிக்க தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மாநிலத்தில் அதிக அளவாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 15 சென்டிமீட்டர் பதிவாகியுள்ளது. 

கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதிலும் நேற்று தொடங்கிய கனமழை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை வெப்பத்தை முழுமையாக குளிர்வித்துள்ளது. இதில் மிக அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் இன்று காலை வரை 15 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

காஞ்சிபுரம் இந்துஸ்தான் பல்கலைப் பகுதியில் 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருச்செங்கோட்டில் 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் கடலூர் 9 செ.மீ, வால்பாறை, சிதம்பரம் விருத்தாசலம் தலா 8 செ.மீ,  புதுச்சேரி, கோடியக்கரை, வேதாரண்யம்  தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் இன்று மேலும் 18 மாவட்டங்களில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், நாமக்கல், சேலம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10  மணி வரை  மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்றும், நாளையும் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்  வானிலை மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, பெரம்பலுார், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்துார், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய  மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், நாளை வரை  க மழை பெய்யும். மற்ற அனேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.  

வரும் 4-ம் தேதி முதல் சில இடங்களில், மிதமான மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும். அதிகபட்சம், 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. இப்படி பரவலாக பெய்த மழையும், பெய்ய உள்ள மழையும் தமிழக மக்களை கோடை வெப்பத்திலிருந்து காப்பாற்றி குளிர்வித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in