இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்; அலறியடித்து ஓடிய பொதுமக்கள்; பறிபோன உயிர்கள்

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்; அலறியடித்து ஓடிய பொதுமக்கள்; பறிபோன உயிர்கள்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் இன்று மதியம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள சியாஞ்சுர் நகரில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் ஜாவா மாகாணத்தை ஒட்டிய சியான் நகரில் அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தலைநகர் ஜகாத்தாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் வீட்டை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் தொடர்ந்து மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in