பள்ளி மீது விழுந்த ஹெலிகாப்டர்: உக்ரைன் அமைச்சர் உள்பட 18 பேர் பலியான சோகம்

பள்ளி மீது விழுந்த ஹெலிகாப்டர்: உக்ரைன் அமைச்சர் உள்பட 18 பேர் பலியான சோகம்

ஹெலிகாப்டர் விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் உட்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே பல மாதங்களாக போர் நடந்து வருகிறது. கடந்த வாரம் திடீரென போர் நிறுத்தத்தை அறிவித்தார் ரஷ்ய அதிபர் புதின். அதே நேரத்தில் ரஷ்ய படைகள் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்துறை அமைச்சர் உட்பட அரசு அதிகாரிகள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துகுள்ளாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் உள்துறை அமைச்சரான டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, இணை அமைச்சர் எவாஹின் எனின் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரி யூரி லுபோவிச் ஆகிய அதிகாரிகளுடன் இன்று ஹெலிகாப்டரில் சென்றார். ஹெலிகாப்டர் தலைநகரான கீவ் நகருக்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ப்ரோவெரி என்ற பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது, அங்கிருந்த மழலையர் பள்ளி அருகே நிலைத் தடுமாறி பள்ளி ஒன்றின் மேற்கூரையின் மீது மோதி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி பற்றி எரிந்தது. இதில் உள்துறை அமைச்சரான டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in