சந்திரிகா குமாரதுங்காவை கொல்ல முயன்றவரின் சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

சந்திரிகா குமாரதுங்கா
சந்திரிகா குமாரதுங்கா

இலங்கையின் முன்னாள் பிரதமரை கொலை செய்ய முயன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரது சொத்துக்களை முடக்கி அமலாக்க துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கையைச் சேர்ந்த குணசேகரன் (எ) பிரேம்குமார் என்பவரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் அவரது மகன் மற்றும் முகமது ஷெரிப், கென்னடி உட்பட 4 பேரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த 2011-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்த அவர்கள், சட்டவிரோதமாக சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக தங்களுடைய அடையாளங்களை மாற்றி இந்தியாவில் குடியிருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து அனைவரையும் கியூ பிரிவு போலீஸார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். இதனை அடிப்படையாகக் கொண்டு அமலாக்க துறையினர் வழக்குப் பதிவு செய்து, இவர்களுக்குச் சொந்தமான கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு சொகுசுபங்களா மற்றும் திருவண்ணாமலை உள்ள இரண்டு விவசாய நிலங்கள் என மொத்தம் 33 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி உள்ளனர். இந்த சொத்துக்கள் அனைத்தும் கடந்த 2011-ம் ஆண்டுக்கு பின்னர் வாங்கப்பட்டது என்றும், இவற்றிற்கு முறையான வருமான விளக்கங்கள் அளிக்காததால் இவற்றை பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்க துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குணசேகரன் என்பவர் எல்டிடிஈ இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டதும், இலங்கையின் முன்னாள் பிரதமர் சந்திரிகா குமாரதுங்காவை கொல்ல முயன்ற வழக்கில் தொடர்புடையவர் என்றும் தற்போது வரை அவ்வழக்கு நிலுவையில் உள்ளது என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in