
108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது மதுபோதையில் இருந்த நபர் பணியாளரை கத்தரிக்கோல் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே பதினெட்டாங்குடியில் விபத்தில் சிக்கி காயமடைந்த 2 பேர், 108 ஆம்புலன்ஸில் மேலூர் அரசு மருத்துவமனைக்கு ஏற்றிச்செல்லப்பட்டனர். கருத்தபுளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ பணியாளர் விமலை, குடி போதையில் இருந்தவர் அங்கிருந்த கத்தரிக்கோலை எடுத்து சரமாரியாக குத்தினார். இதில் விமலுக்கு 5க்கும் மேற்பட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. மேலூர் அரசு மருத்துவமனையில் விமலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மேலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.