சொத்து கேட்டு தாய் மீது தாக்குதல்: ஜாமீனில் வந்த மகன் செயலால் போலீஸார் அதிர்ச்சி

சொத்து கேட்டு  தாய் மீது தாக்குதல்: ஜாமீனில் வந்த மகன் செயலால் போலீஸார் அதிர்ச்சி

சொத்துக்களை தன் பெயருக்கு எழுதி கேட்டு பெற்றோரை தாக்குதல் நடத்திய மகன் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்விவகாரத்தில் ஜாமீனில் வந்து மீண்டும் அதே செயலை செய்ததால் போலீஸார் அவரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், சுப்பிரமணியபுரம் அருகே உள்ள சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி சண்முகத்தாய்(70) இவர்களுக்கும், இவர்களது மூன்றாவது மகன் இசக்கி பாண்டிக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்துவந்தது. இதனால் இசக்கி பாண்டி சொத்துக்களை தன் பெயரில் எழுதிக்கேட்டு தன் பெற்றோர்களான இசக்கி முத்து, சண்முகத்தாய் ஆகியோரை கொடூரமாகத் தாக்கினார். இதுகுறித்து இசக்கி பாண்டி மீது களக்காடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இவ்வழக்கில் இசக்கி பாண்டி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். இவ்வழக்கில் இருந்து அண்மையில் ஜாமீனில் வெளியே வந்த இசக்கி பாண்டி சொத்தை மீண்டும் தன் பெயருக்கு எழுதிக்கேட்டு தன் தாய் சண்முகத்தாயிடம் தகராறில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் மீண்டும் தன் தாயான சண்முகத்தாயைத் தாக்கினார். இதுகுறித்து மீண்டும் சண்முகத்தாய் களக்காடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து இசக்கி பாண்டி தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in