
அசாம் மாநிலத்தில் 12ம் வகுப்பு தேர்வில் அதிகம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற 35,775 மாணவர்களுக்கு ஸ்கூட்டர் வாகனங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது.
அசாம் மாநிலத்தில் டாக்டர் பனிகாந்தா ககாதி விருது என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி உயர்கல்வியில் 75 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்ற பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.15,000 வழங்கப்படுகிறது. இதேபோல், 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு இலவசமாக ஸ்கூட்டர் வாகனம் வழங்கப்படுகிறது.
இதன்படி 35,775 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிற நவம்பர் 30ம் தேதி அன்று ஸ்கூட்டர்கள் வழங்கப்பட உள்ளது. இதில் 5,566 பேர் மாணவர்கள், 30,209 பேர் மாணவிகள் ஆவர். இதேபோல் பத்தாம் வகுப்பில் 75 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்ற 27,183 மாணவர்களுக்கு தலா ரூ.15,000 நவம்பர் 29ம் தேதி வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது