அசாம் குழந்தை திருமண கைதுகள்; தனிப்பட்ட வாழ்க்கையில் அழிவை ஏற்படுத்துகிறது: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்றம் உத்தரவுஅசாம் குழந்தை திருமண கைதுகள்; தனிப்பட்ட வாழ்க்கையில் அழிவை ஏற்படுத்துகிறது

அசாமின் குழந்தை திருமணங்களுக்கு எதிரான கைது நடவடிக்கைகள் குறித்து கவகாத்தி உயர் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குழந்தை திருமண குற்ற வழக்குகளில் போக்சோ சட்டத்தை பயன்படுத்துவது குறித்தும் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

அசாமில் குழந்தைத் திருமண குற்றங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 3,000 க்கும் மேற்பட்டோர் இதுவரை மாநிலம் முழுவதும் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தங்கள் குடும்பத்தின் ஒரே சம்பாதிக்கும் ஆண் நபரை கைது செய்துள்ளதாக, மாநிலம் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பல ஆண்டுகளுக்கு முற்பட்ட வழக்குகளை இப்போது கையில் எடுத்திருப்பதால் காவல்துறையின் நடவடிக்கை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தை திருமண வழக்குகளில் போக்சோ சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான சட்டப்பூர்வமான தன்மை குறித்தும் நிபுணர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேருக்கு நேற்று முன் ஜாமீன் வழங்கிய கவுகாத்தி உயர்நீதிமன்றம், இவை காவலில் விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகள் அல்ல என்று குறிப்பிட்டது. மேலும், "போக்சோவில் நீங்கள் எதையும் சேர்க்கலாம். போக்சோ குற்றச்சாட்டு என்றால் என்ன? போக்சோ சேர்க்கப்படுவதால், நீதிபதிகள் அங்கு இருப்பதைப் பார்க்க மாட்டார்கள் என்று அர்த்தமா? நாங்கள் இங்கு யாரையும் விடுவிக்கவில்லை. விசாரணையை யாரும் தடுக்கவில்லை. இங்கே பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு உள்ளதா? " என்று நீதிபதி சுமன் ஷ்யாம் கேள்வி எழுப்பினார். "தற்போதைக்கு, இந்த நீதிமன்றமானது இது தொடர்பான வழக்குகளில் காவலில் வைத்து விசாரணை என்பது தேவையில்லாத விஷயங்கள் என்று கருதுகிறது. நீங்கள் யாரையாவது குற்றவாளி என்று கண்டறிந்தால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுங்கள்" என்று இது தொடர்பான மற்றொரு வழக்கில் நீதிமன்றம் கூறியது.

மேலும், "இது மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அழிவை ஏற்படுத்துகிறது. கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் குழந்தைகள், குடும்ப உறுப்பினர்கள், முதியவர்கள் உள்ளனர். வெளிப்படையாக குழந்தை திருமணம் தவறான யோசனை. நாங்கள் இது தொடர்பாக எங்கள் கருத்தை தெரிவிப்போம், ஆனால் இந்த நேரத்தில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்க வேண்டுமா என்பதே பிரச்சினை" என்றும் தெரிவித்துள்ளது

அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவால் மாநிலத்தின் மோசமான சுகாதார அளவீடுகளை சரிசெய்வதற்கான முயற்சியாக, குழந்தை திருமணத்திற்கு எதிரான நடவடிக்கைகள் பிப்ரவரி 3 அன்று 4,000 க்கும் மேற்பட்ட குழந்தை திருமண வழக்குகளுடன் தொடங்கியது. இதனை எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in