`இந்தியில் கஸ்டமர் கேர் நடத்துகிறார்கள்; தமிழில் பேச சொல்லுங்க’- ஸ்விக்கி நிறுவனத்துக்கு எதிராக போராடும் ஊழியர்கள்!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஸ்விக்கி ஊழியர்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஸ்விக்கி ஊழியர்கள்`இந்தியில் கஸ்டமர் கேர் நடத்துகிறார்கள்; தமிழில் பேச சொல்லுங்க’- ஸ்விக்கி நிறுவனத்துக்கு எதிராக போராடும் ஊழியர்கள்!

கஸ்டமர் கேரில் தமிழில் மட்டுமே பேச வேண்டும் உள்ளிட்ட பல்வேறுக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஸ்விக்கி ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில், ஸ்விக்கி ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட சட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும், கஸ்டமர் கேரில் தமிழில் மட்டுமே பேச வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்விக்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையில் பதாகைகள் ஏந்தி ஸ்விக்கி நிர்வாகத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்விக்கி ஊழியர்கள், ‘’ இந்திய தொழிலாளர் சட்டப்படி இவ்வளவு நேரம் தான் ஒரு ஊழியர் பணியாற்ற வேண்டும் என உள்ளது. ஆனால் அதையும் மீறி பணியாற்ற சொல்கிறார்கள்.

2015-ல் பெட்ரோல் 50 ரூபாய் விற்றபோது ஒரு ஆர்டருக்கு 40 ரூபாய் கமிஷன் கொடுத்தார்கள். தற்போது 100 ரூபாய் தாண்டி விற்கும் நிலையில் ஒரு ஆர்டருக்கு 20 ரூபாய் மட்டுமே கொடுத்து சுரண்டுகின்றனர்.

ஊழியர் என்பதற்கு கூட பணி ஆணை கிடையாது. தமிழ்நாட்டில் வியாபாரம் செய்கிறார்கள். ஆனால் இந்தியில் கஸ்டமர்கேர் நடத்துகிறார்கள். இதையெல்லாம் மாற்ற வேண்டும்’’ என்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in