ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டி: இந்திய வீராங்கனை மணிகா வரலாற்று சாதனை

மணிகா பத்ரா
மணிகா பத்ரா

ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் முதன் முறையாக வெண்கல பதக்கம் வென்று இந்திய வீராங்கனை மணிகா பத்ரா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிகள் தாய்லாந்தின் பாங்காங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ரா, ஹினா ஹயாட்டா ஆகியோர் மோதினர்.

இந்த போட்டியில் மணிகா பத்ரா 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மணிகா படைத்துள்ளார்.

முன்னதாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் மணிகா பத்ரா ஜப்பானின் மிமா இடோவிடம் 2-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால் வெண்கலப் பதக்க ப்போட்டியில் மணிகா விளையாடினார். இந்தப்போட்டியில் வெற்றி பெற்று மணிகா சாதனையை படைத்துள்ளார்.

ஆசியக் கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் மணிக்கா பத்ரா, 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஹினா ஹயாடாவை வீழ்த்தி வெண்கலம் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் டேபிள் டென்னிஸ் வீராங்கனை என்ற பெருமையை மணிகா பத்ரா பெற்றுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in