வீறுநடை போடும் ஆப்கானிஸ்தான் வீரர்கள்: ஆசிய கிரிக்கெட் போட்டியில் நடக்கும் ஆச்சரியம்

வீறுநடை போடும் ஆப்கானிஸ்தான் வீரர்கள்: ஆசிய கிரிக்கெட் போட்டியில் நடக்கும் ஆச்சரியம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்து அசத்தியுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசிய கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. சார்ஜாவில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- வங்கதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தார். மொசாடெக் உசைன் 48 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். மஹ்முதுல்லா 25 ரன் எடுத்தார். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் முஜிபுர் ரஹமான், ரஷித் கான் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

இதன் பின்னர் 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கர்பாஸ் 11 ரன்னிலும், ஷஷாய் 23 ரன்னிலும், கேப்டன் முகமது நபி 8 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதன் பின்னர் இப்ராஹிம் சட்ரான் நிதானமாக விளையாடினார். அவருடன் இணை சேர்ந்த நஜிபுல்லா அதிரடியாக விளையாடி 17 பந்தில் 43 ரன்களை விளாசினார். இதில், 6 சிக்சர், ஒரு பவுண்டரி அடங்கும். இப்ராஹிமும் 42 ரன்களை எடுத்தார். இதனால் 18.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான் அணி. தொடர்ந்து இரண்டு வெற்றிகளை பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதல் ஆளாக சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது. ஆட்ட நாயகனாக முஜிபுர் ரஹ்மான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தாலிபான் பிடியில் ஆப்கானிஸ்தான் சிக்கி தவித்து வருகிறது. இருந்தாலும் அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் ஆசிய கோப்பையில் அசத்தி வருவது பல நாட்டு வீரர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in