ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையில் தொல்லியல் துறை சொல்லியிருப்பது என்ன?... 4வது முறையாக அவகாசம் கோரியதில் இழுபறி

வாராணசியில் ஞானவாபி மசூதி மற்றும் காசி விஸ்வநாதர் ஆலயம் ஆகியவற்றின் அமைவிடம்
வாராணசியில் ஞானவாபி மசூதி மற்றும் காசி விஸ்வநாதர் ஆலயம் ஆகியவற்றின் அமைவிடம்The Hindu

ஞானவாபி மசூதியில் தனது ஆய்வை முடித்திருக்கும் தொல்லியல் துறை, நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதில் இழுத்தடித்து வருகிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் வாராணசியில் உள்ளது காசிவிஸ்வநாதர் ஆலயம். இதனை ஒட்டியே ஞானவாபி மசூதி உள்ளது. முகலாயர் ஆட்சிக்காலத்தில் காசிவிஸ்வநாதர் ஆலயத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து மசூதி எழுப்பப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு நீண்டகாலமாக நீடிக்கிறது.

ஞானவாபி மசூதி
ஞானவாபி மசூதி

இதனை உறுதிபடுத்தும் வகையில் சிவலிங்கம் ஒன்றும் ஞானவாபி மசூதிக்குள் அடையாளம் காணப்பட்டது. ஆனால் அந்த அடையாளத்தை நீருற்று என மசூதி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தை எட்டியதை அடுத்து, ஞானவாபி மசூதியில் அறிவியல் முறைப்படி ஆய்வு நடத்த தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

அவ்வாறு ஞானவாபி மசூதியில் நடைபெற்ற தொல்லியல் துறையினரின் ஆய்வு முடிந்த பின்னரும், அது குறித்தான ஆய்வறிக்கை சமர்பிக்கப்படுவதில் இழுபறி நீடிக்கிறது. ஆய்வறிக்கை தயார் செய்வதில் கூடுதல் அவகாசம் கோரி, தொல்லியல் துறை மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்டது. கடைசியாக தொல்லியல் துறை பெற்ற நவ.17 வரையிலான அவகாசம் இன்றோடு முடிவடைகிறது.

தொல்லியல் துறை
தொல்லியல் துறை

இதனையொட்டி இந்திய தொல்லியல் துறையினர் மற்றுமொரு முறை அவகாச நீட்டிப்பு கோரி வாராணசி மாவட்ட நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதனிடையே, தொல்லியல் துறையினர் கூடுதல் அவகாசம் கோருவது தொடர்பாக பொதுவெளியில் கேள்வி எழுந்துள்ளது. தொல்லியல் துறை அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது என்ன என்றும், கூடுதல் அவகாசம் கேட்கப்படுவது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... வேர்ல்டு கப் பைனல்... நடிகர் அமிதாப் பச்சனுக்கு தொடர்ந்து மிரட்டல்!

பிக் பாஸ் வீட்டில் ரணகளம்... விசித்ராவுடன் மல்லுக்கட்டிய நிக்ஸன்!

விஜய்சேதுபதி, மஞ்சுவாரியருக்காக புது டெக்னாலஜி... தமிழ் சினிமாவின் அடுத்த பாய்ச்சல்!

வீலிங் செய்து எமனுக்கு காலிங்... டூ வீலரில் இளைஞரின் அட்டகாசம்!

குட் நியூஸ்... இனி புக் செய்த அனைவருக்கும் ரயில் டிக்கெட்; ரயில்வேயின் புதிய திட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in