அஷ்வின் புதிய சாதனை: டெஸ்ட் கிரிக்கெட் இந்திய பவுலர்களில் இவர்தான் நம்பர் ஒன்!

அஷ்வின் புதிய சாதனை: டெஸ்ட் கிரிக்கெட் இந்திய பவுலர்களில் இவர்தான் நம்பர் ஒன்!

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் போட்டிகளில் புதிய சாதனையைப் படைத்துள்ளார். இன்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அதிவேக 450 விக்கெட்டுகள் என்ற புதிய மைல்கல்லை அஷ்வின் எட்டினார்.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 63.5 ஓவர்களில் 177 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இப்போட்டியில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இன்றைய டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரியின் விக்கெட்டின் வீழ்த்தியதன் மூலமாக அஷ்வின் டெஸ்ட் போட்டிகளில் 450 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார். இதனால் 450 விக்கெட்டுகள், 3 ஆயிரம் ரன்கள் எடுத்த 3 வது வீரர் என்ற பெருமையை ரவிச்சந்திரன் அஷ்வின் பெற்றுள்ளார். ஏற்கெனவே 3 ஆயிரம் ரன்கள், 450 விக்கெட்டுகள் என்ற சாதனையை ஷேன் வார்ன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் கைவசம் வைத்துள்ளனர்.

450 விக்கெட்டுகளை அதிவேகமாக வீழ்த்திய 3 வது வீரர் என்ற பெருமையையும் அஷ்வின் பெற்றுள்ளார். அதேபோல அதிவேகமாக 89 டெஸ்ட்களில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையையும் ரவிச்சந்திரன் அஷ்வின் பெற்றுள்ளார். முன்னதாக இந்திய வீரர் அனில் கும்ப்ளே 93 டெஸ்ட்களில் 450 ரன்களை வீழ்த்தியிருந்தார். அவரின் சாதனையை முறியடித்து அதிவேகமாக 450 ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் அஷ்வின் முதலிடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் 80 டெஸ்ட்களில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். மேலும், அஷ்வின் 113 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 153 விக்கெட்டுகளையும், 65 டி20 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in