டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சில் அஸ்வின் புதிய சாதனை!

ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின்டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சில் அஸ்வின் புதிய சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை இரண்டு முறை டக் அவுட் செய்த முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.

இன்று டெல்லியில் நடந்த இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் அஸ்வின் பந்துவீச்சில் கேட்ச் ஆனதை அடுத்து அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். முன்னதாக, 2020ல் மெல்போர்ன் டெஸ்டில் ஸ்மித்தை டக் அவுட் செய்திருந்தார் அஸ்வின். இதன் மூலமாக ஸ்டீவ் ஸ்மித்தை இரண்டு முறை டக் அவுட் செய்த முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.

இன்றைய டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 91 ரன்கள் எடுத்திருந்தபோது 22.4 வது ஓவரில் லபுசக்னே(18 ரன்கள்) விக்கெட்டை எல்பிடபுள்யூ முறையில் அஸ்வின் எடுத்தார். அதே ஓவரின் 6வது பந்தில் ஸ்மித்தையும் அஸ்வின் டக் அவுட் ஆக்கினார். இந்த இன்னிங்ஸில் மற்றொரு வீரரான அலெக்ஸ் கேரேவையும் டக் அவுட்டாக்கினார் அஸ்வின். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 263 ரன்களில் ஆல் அவுட் ஆனது. முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் விழ்த்தினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in