திருடு போகும் தக்காளி... தோட்டம் முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்திய விவசாயி!

தக்காளி திருட்டு சிசிடிவி
தக்காளி திருட்டு சிசிடிவி

மகாராஷ்டிராவின் வாலுஜ் பகுதியில் தக்காளி பயிரிட்டுள்ள விவசாயி, தக்காளிகளை யாரும் திருடி சென்று விடாமல் பாதுகாக்க தனது வயலில் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார்.

நாடு முழுவதும் தக்காளியின் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ தக்காளியின் விலை 150 ரூபாயை கடந்து விற்பனையாகி கொண்டிருக்கும் சூழலில், மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள விவசாயி ஒருவர், தனது வயலில் தக்காளிகள் திருடு போவதைத் தடுக்க சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார். விவசாயியான ஷரத் ராவத்தே, தனது வயலில் கேமராக்கள் பொருத்துவதற்கு ரூ.22 ஆயிரம் செலவிட்டதாகவும், ஆனால் இது காலத்தின் தேவை என்றும் கூறினார்.

தக்காளி
தக்காளி

விலை கடுமையாக உயர்ந்ததால், தக்காளி திருடப்பட்ட சம்பவங்கள் நாடு முழுவதும் பல இடங்களில் நடந்து வருகின்றன. கடந்த திங்களன்று, கர்நாடகாவின் கோலாரில் இருந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு சுமார் 21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தக்காளியைக் கொண்டு சென்ற லாரி காணாமல் போனதாக கர்நாடக காவல்துறை தெரிவித்துள்ளது.

மற்றொரு சம்பவத்தில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் காய்கறி சந்தையில் உள்ள கடைகளில் இருந்து சுமார் 40 கிலோ தக்காளியை திருடர்கள் திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in