கேஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை... உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை முறையீடு!

உச்சநீதிமன்றம், அமலாக்கத் துறை
உச்சநீதிமன்றம், அமலாக்கத் துறை

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

டெல்லியில் கலால் கொள்கை தொடர்புடைய ஊழல் முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் வழக்கு தொடுத்துள்ளார்.

அமலாக்கத் துறையால் அர்விந்த் கேஜ்ரிவால் கைது
அமலாக்கத் துறையால் அர்விந்த் கேஜ்ரிவால் கைது

இந்த வழக்குத் தொடர்பாக அமலாக்கத் துறை தரப்பிலிருந்து பதில் மனுவாக பிரமாணப் பத்திரம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “கேஜ்ரிவாலுக்கு பல முறை சம்மன் அனுப்பப்பட்ட போதிலும் அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. 9 முறை சம்மன் அனுப்பப்பட்ட போதிலும் விசாரணை அதிகாரி முன் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.

ஒரு நபர் எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும், குற்றத்துக்காக கைது செய்யப்பட்டால், ஒரு அரசியல்வாதியை சாதாரண குற்றவாளியிலிருந்து வித்தியாசமாக நடத்துவது, தன்னிச்சையான மற்றும் பகுத்தறிவற்றதாகும். இது அரசியலமைப்பின் 14-வது பிரிவின் கீழ் கூறப்பட்டுள்ள சமத்துவக் கொள்கையை மீறுவதாகும்.” என தெரிவிக்கப்பட்டது.

அமலாக்கத் துறை
அமலாக்கத் துறை

அமலாக்கத் துறையின் பிரமாணப் பத்திரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, “அமலாக்கத் துறை பொய்களைச் சொல்லும் இயந்திரத்தைத் தவிர வேறொன்றுமில்லை. ஒவ்வொரு முறையும் அது தனது எஜமானர்களான பாஜகவின் விருப்பப்படி புதிய பொய்களை தூக்கிக் கொண்டு வருகிறது" என தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ராகுல் காந்தியின் ஆண்மையை பரிசோதிக்க தாய், மகள்களை அவருடன் தூங்க அனுப்புங்கள்... காங்கிரஸ் பிரமுகரின் சர்ச்சை பேச்சு!

கைதானவங்க நம்மாளுங்க தான்; ஆனா ரூ.4 கோடி எனதில்லை... நயினார் நாகேந்திரன் விளக்கம்!

அதிர்ச்சி... ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரியின் மண்டை உடைப்பு: சென்னையில் பரபரப்பு!

நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு... நாட்டின் கவனம் ஈர்க்கும் நட்சத்திரத் தொகுதிகள் இவைதான்!

முன்பு முதலை, இப்போது சிறுத்தை... படுகாயங்களுடன் உயிர் பிழைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in