போலீஸ் அதிகாரி என்னிடம் தவறாக நடந்து கொண்டார்: கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்
டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், தன்னிடம் போலீஸ் அதிகாரி ஒருவர் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி கலால் கொள்கை தொடர்புடைய முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத்துறை நேற்று முன்தினம் இரவு கைது செய்தது. அவரை நேற்று டெல்லியில் உள்ள ரூஸ் அவின்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதைத் தொடர்ந்து வரும் 28ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க, அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்நிலையில், இதே வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை நீதிமன்ற வளாகத்தில் தாக்கிய போலீஸ்காரர், தன்னிடமும் தவறாக நடந்து கொண்டதாக கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

ரூஸ் அவின்யூ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கேஜ்ரிவால் இதனை தெரிவித்துள்ளார். அந்த மனுவில், "விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது உதவி போலீஸ் கமிஷனர் ஏ.கே.சிங் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார்.

டெல்லி ரூஸ் அவின்யூ நீதிமன்றம்
டெல்லி ரூஸ் அவின்யூ நீதிமன்றம்

எனவே, அவரை தனது பாதுகாப்பு வளையத்திலிருந்து நீக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் கேஜ்ரிவாலிடம் எத்தகைய அத்துமீறலில் அந்த போலீஸ்காரர் ஈடுபட்டார் என்பது குறித்து எதுவும் தெரியவரவில்லை.

கடந்த ஆண்டு அதே நீதிமன்ற வளாகத்தில் மணீஷ் சிசோடியாவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். அப்போது, பதில் கூறிய சிசோடியாவை, இப்போது புகாருக்குள்ளாகியுள்ள போலீஸ் அதிகாரி ஏ.கே.சிங், கழுத்தை பிடித்து தள்ளியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

அந்த சம்பவம் குறித்து மணீஷ் சிசோடியா எழுத்துப்பூர்வமாக புகார் அளித்திருந்தார். இருப்பினும், டெல்லி காவல்துறை எந்த தவறும் செய்யவில்லை என கூறியதோடு, வீடியோவில் காட்டப்பட்டுள்ள நடவடிக்கை பாதுகாப்புக்கு அவசியம் என்றும், எந்தவொரு குற்றம் சாட்டப்பட்டவரும் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பது சட்டத்துக்கு எதிரானது என்றும் தெரிவித்திருந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in