சென்னை வங்கிக் கொள்ளையில் மேலும் ஒருவர் கைது: 14 கிலோ தங்க நகைகள் எங்கே?

சென்னை வங்கிக் கொள்ளையில் மேலும் ஒருவர் கைது: 14 கிலோ தங்க நகைகள் எங்கே?

அரும்பாக்கத்தில் தனியாா் வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து பாதி நகைகள் மீட்கப்பட்டு விட்ட நிலையில் மீதி 14 கிலோ நகைகளை வைத்திருப்பதாக கருதப்படும் சூர்யாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியின் நகைக்கடன் வழங்கும் பெட்பேங்க் கோல்ட் லோன்ஸ் நிறுவனத்தில் கடந்த 13-ம் தேதியன்று ஒரு கும்பல் 31.7 கிலோ நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது. அரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து அதே கிளையில் பணிபுரிந்த ஊழியா் கொரட்டூா் முருகன் என்பவர்தான் கும்பலுக்கு தலைவராக செயல்பட்டு கொள்ளைத் திட்டத்தை நிறைவேற்றியிருப்பதைக் கண்டறிந்தனர்.

அவரோடு பள்ளியில் ஒன்றாக படித்த நண்பர்களான வில்லிவாக்கம் பாரதி நகரைச் சோ்ந்த மோ.சந்தோஷ் (30), மண்ணடித் தெருவைச் சோ்ந்த வீ.பாலாஜி (28), செந்தில்குமரன் உள்ளிட்ட ஆறு பேருடன் இணைந்து அவர் இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியிருப்பது தெரிய வந்தது. அவர்களில் அந்த 3 பேரை முதல் கட்டமாக கடந்த ஞாயிறன்று கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ.8.5 கோடி மதிப்புள்ள 18 கிலோ தங்க நகைகள், 2 காா்கள்,ஒரு மோட்டாா் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஆனால், முக்கிய குற்றவாளியான முருகனை அதுவரை கண்டறிய முடியவில்லை. இந்த நிலையில் கொரட்டூர் காவல் நிலையத்தில் முருகன் நேற்று சரணடைந்ததாக கூறப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மீதி நகைகள் சூர்யா என்பவரிடம் கொடுத்து வைத்திருப்பதாக தெரிய வந்தது. இதனால் சூர்யாவை தீவிரமாக போலீஸார் தேடி வந்தனர். நேற்று நள்ளிரவில் சூர்யாவை அவர் பதுங்கி இருந்த இடத்திலிருந்து தனிப்படை போலீசார் கண்டறிந்து கைது செய்தனர். தற்போது ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணையின் முடிவில் மீதமுள்ள 14 கிலோ நகைகளை அவர் பதுக்கி வைத்திருக்கும் இடம் கண்டறியப்பட்டு ள் நகைகள் மீட்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in